யாழ். குடாநாட்டில் 3 தினங்களாக விடாது பெய்யும் தொடர் மழை

Date:

யாழ்.குடாநாட்டில் 3 நாட்களாக தொடரும் பருவ மழை காரணமாக நூற்றுக் கணக்கான குடும்பங்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக மாவட்டச் செயலகம் தெரிவிக்கின்றது.

கடந்த 72 மணி நேரத்தில் சுமார் 165 மி.மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகிய நிலையில் இதுவரை 16 குடும்பங்கள் இடம்பெயர்ந்து பல நூறு குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.

இதில் தாழ்வான பிரதேசங்கள் மற்றும் குடிசை வீடுகள், வீட்டுத் திருத்த வேலைகளில் அகப்பட்ட குடும்பங்களே அதிக பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.

மழை வீழ்ச்சி தொடர்ச்சியாக ஏற்படுவதன் காரணமாக குளிருடன் கூடிய காலநிலையும் காணப்படுவதனால் சிறியவர்கள் மற்றும் முதியவர்கள் அதிக பாதிப்பினை எதிர்கொள்கின்றனர்.

மழை காலத்தில் வீட்டில் சமைத்துக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வாறான காலத்தில் உடனடி பசிக்கு உணவளிக்கும் பாணின் விலை நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் 250 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதனால் அதனைப் பெறுவதிலும் பெரும் நெருக்கடி காணப்படுகின்றது.

  • Dayalan – vk

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

37 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.  சட்டவிரோதச்...

ஸ்டாலின் தோல்வி!

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்...

அதிரடி முன்னிலையில் தமிழக விஜய் வெற்றிக் கழகம்!

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4,...

மகிந்த ராஜபக்சவுக்கு CIABOC அழைப்பாணை!

இலங்கை விமானச் சேவையின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு...