நாட்டின் சீனி நுகர்வில் ஏறக்குறைய 10% பெலவத்தை மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது, மேலும் அந்த தொழிற்சாலைகள் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்கியுள்ளன.
செவனகல சீனி தொழிற்சாலை கடந்த வருடம் 3 பில்லியன் ரூபாவை அதிகூடிய இலாபமாக ஈட்ட முடிந்தது, அதேவேளை பெலவத்த தொழிற்சாலையும் ஒவ்வொரு வருடமும் தனது ஈவுத்தொகையை அதிகரித்து வருகின்றது.
இரண்டு தொழிற்சாலைகளும் கடந்த மார்ச் மாதம் திறைசேரிக்கு 350 மில்லியன் ரூபாவை வழங்க முடிந்தது.
இருந்த போதிலும், பெலவத்தை மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளை அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தப்படாத நிலையில் முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் நேற்று (04) ஆளும் கட்சியிடம் கேள்வி எழுப்பினார்.