அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்று திங்கட்கிழமை மேலும் வலுவடைந்துள்ளது.
மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி டொலர் ஒன்றின் விற்பனை விலை 327 ரூபாய் 72 சதங்களாகும். கொள்விலை 311 ரூபாய் 63 சதங்களாக பதிவு செய்யப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை டொலர் ஒன்றின் விற்பனை விலை 330 ரூபாய் 56 சதங்களாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
N.S