விசா காலத்தை மீறித் நாட்டில் தங்கியிருப்பவர்களுக்கு அபராதம்!

Date:

செல்லுபடியாகும் விசாக் காலத்தை மீறித் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு விசா கட்டணத்துடன் கூடுதலாக 500 டொலர்கள் அபராதத்தை விதிக்க பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அமைச்சர் திரன் அலஸ் தலைமையில் அண்மையில் நடைபெற்ற பொது பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விசாவின் காலம் முடிந்து 07 நாட்களுக்கும் மற்றும் 14 நாட்களுக்கும் இடையில் தங்கியிருந்தால் 250 டொலர்களும் 14 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தால் 500 டொலர்களும் அபராதம் விதிக்கப்படும்.

இந்த உத்தரவுகள் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் எங்கே? யாருக்கு சென்றது?

வெளிநாட்டு கடன் செலுத்தும் செயல்முறையின் போது காணாமல் போன அமெரிக்க டொலர்...

எம்பி அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான ராமநாதன் அர்ச்சுனா இன்று (27) காலை கைது...

ரணிலுகுக்கு எதிரான வழக்கு – விசாரணை புதன்கிழமை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு அடுத்ததாக...

2 மணிக்குப் பின்னர் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...