தருஷியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்திய ஜனாதிபதி

Date:

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி தருஷி கருணாரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி நேற்று (05) காலை மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது திறமைக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

சர்வதேச மட்டத்தில் இலங்கைக்காக அவர் பெற்றுக்கொடுத்த தனித்துவமான வெற்றியினால் நாடு மிகவும் பெருமையடைவதாக தெரிவித்த ஜனாதிபதி, அவரது எதிர்கால விளையாட்டு நடவடிக்கைகளுக்கு தனது ஆசீர்வாதத்தையும் தெரிவித்தார்.

மேலும், மாணவி தருஷி கருணாரத்ன நாட்டிற்கு வந்ததன் பின்னர் அவரைச் சந்திக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை ரூபாய்!

மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன்...

அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக,...

சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்

முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை...

இறக்குமதி பால் மா விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை...