சீனாவின் சினோபெக் நிறுவனம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை மிகப்பெரிய முதலீடு செய்யத் தயாராகி வருகிறது.
இதன்படி, ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகள் சினோபெக் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தம் அடுத்த இரண்டு வாரங்களில் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினோபெக்கிற்கு மேலதிகமாக, ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்காக விட்டோல் என்ற சிங்கப்பூர் நிறுவனமும் முன்னிலையில் இருந்தது, ஆனால் விட்டோல் விலகிய பின்னர், சினோபெக் திட்டத்தை பெறுகிறது. அண்மையில் சீனாவிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த விஜயத்தின் போது சினோபெக் நிறுவனத்தின் தலைவரை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.