கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபரின் மணிவிழா நிகழ்வு சிறப்பாக முன்னெடுப்பு!

Date:

கிளிநொச்சி மாவட்ட பிரபல பாடசாலையான கிளிநொச்சி மகாவித்தியாலய முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கத்தின் மணிவிழா நிகழ்வு இன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு நேற்று காலை 9 மணியளவில் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் வைத்தியர் குகராஜா தலைமையில் இடம்பெற்றது.

கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டினை தொடர்ந்து, மணிவிழா நாயகியான பாடசாலை முதல்வருக்கு மலர் மாலை அணிவித்து பாடசாலை மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

தொடர்ந்து வாழ்த்துரைகளும், கௌரவிப்புகளுடம் இடம்பெற்றதுடன், கலை நிகழ்வுகளும் விழா மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த மணிவிழா நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும், குறித்த பாடசாலையின் முன்னைநாள் அதிபருமான சி.சிறிதரன், மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, அதிபர்கள், ஆசிரியர்கள், ஓய்வுநிலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...