ஜனாதிபதி ரணிலுக்கு வலு சேர்க்கும் லன்சா குழுவின் நடவடிக்கை புத்தளத்தில்

0
133

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயேட்சையாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான குழுவினால் உருவாக்கப்பட்ட புதிய கூட்டணியின் புத்தளம் மாவட்ட நடவடிக்கைகள் 5 தொகுதிகளிலும் டிசம்பர் மாதம் முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் லான்சா மற்றும் பியங்கர ஜயரத்ன ஆகியோரின் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய கூட்டணியின் பிரதேச பிரதிநிதிகள் நியமனம், இணைந்த அமைப்புக்களை நிறுவுதல், பிக்குகள் அமைப்புகளை நிறுவுதல், பெண்கள் அமைப்புகளை ஸ்தாபித்தல் போன்றன இந்த மாதம் முழுவதும் நடைபெறவுள்ளதுடன், சிறிபால அமரசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார ஆகியோர் அந்த நிகழ்ச்சிகளை வழிநடத்திச் சென்றுள்ளனர்.

இதேவேளை, சிலாபம் தொகுதியை மையமாக வைத்து, மாகாண சபையின் நடமாடும் சேவை ஒன்று, மாதம்பே கருக்குவ சுகதானந்த மகா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

வடமேற்கு ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவிடம் நிமல் லான்சா விடுத்த கோரிக்கையின் பிரகாரம் அது முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த புதிய அரசியல் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் அதனை வெளிப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here