புதிய அரசே தற்போதைய தேவை; சஜித் அணி சுட்டிக்காட்டு

Date:

“புதிய அரசே எமது நாட்டுக்குத் தேவைப்படுகின்றது. அதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.”

  • இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிதான் இந்த நாட்டை வங்குரோத்து அடைய வைத்தது. அந்தத் தரப்புடன்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தற்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருக்கின்றார்.

இவ்வாறு நாட்டை வங்குரோத்து அடைய வைத்தவர்களால் நாட்டை மீட்க முடியுமா? முடியாது.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து பயணிப்பதற்குச் சாத்தியமே இல்லை.

எனவே, புதியதொரு அரசே எமது நாட்டுக்குத் தேவைப்படுகின்றது. அதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

விமல் இன்று கைதாகக் கூடும்

பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள ரணவிரு நினைவுச்சின்னம் அருகே நேற்று முன்தினம் (18)...

வரி உயர்வதற்கு முதல் நாள் 4000 வாகனங்கள் இறக்குமதி? பல கோடி மோசடி

வாகன இறக்குமதியில் சுங்க இறக்குமதி வரியை 50% உயர்த்தும் வர்த்தமானி அறிவிப்பு...

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக...

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...