2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தாம் எங்கும் அறிவிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சியின் பலமானவர்கள் குழுவுடன் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு அமைச்சர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
“நீங்கள், இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு வரமாட்டீர்கள் என்று சிலர் கூறுகின்றனர். இது உண்மையா? இல்லை?” என்று அமைச்சர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “இன்னும் வருகிறேன் என்று சொல்லவில்லை, வரவில்லை என்றும் சொல்லவில்லை” என தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளது” என்றார்.
கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்து புதிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என கூறியுள்ள ஜனாதிபதி, அதற்கு கால அவகாசம் தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.