சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் பன்றிக் காய்ச்சல் வைரஸ்

Date:

சீனாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிப் பொருட்களில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை இறைச்சியினை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரச கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் சிசிர பியசிறி தெரிவித்தார்.

தொற்றுக்குள்ளான இறைச்சிகளை அழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் கால்நடை வளர்ப்புத் தொழில் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் எனவும் சிசிர பியசிறி சுட்டிக்காட்டினார்.

இந்த மாதத்தின் முதல் வாரத்தில் பன்றி இறைச்சி, சொசேஜஸ் மற்றும் வாத்து இறைச்சி என்பன கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதியின்றி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

குறித்த இறைச்சியில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் என்ற நோய் நிலைமை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், இறக்குமதி செய்யப்பட்ட குறித்த இறைச்சி தொகை, சந்தைக்கு விடுவிக்கப்படவில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமாலி கொதலாவல தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்

முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை...

இறக்குமதி பால் மா விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை...

விமல் இன்று கைதாகக் கூடும்

பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள ரணவிரு நினைவுச்சின்னம் அருகே நேற்று முன்தினம் (18)...

வரி உயர்வதற்கு முதல் நாள் 4000 வாகனங்கள் இறக்குமதி? பல கோடி மோசடி

வாகன இறக்குமதியில் சுங்க இறக்குமதி வரியை 50% உயர்த்தும் வர்த்தமானி அறிவிப்பு...