45 நாட்களுக்கு மூடப்படும் சபுகஸ்கந்த!

Date:

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் தினசரி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதத்தில் இருந்து 45 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படும் என இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

திட்டமிடப்பட்ட பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் நடவடிக்கைகளுக்காக சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச விதிகளின்படி, இந்த பராமரிப்பு பணிகள் 45 நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனூடாக, எதிர்வரும் மூன்று வருடங்களுக்காக சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் அதிகபட்ச உற்பத்தி திறன், பாதுகாப்பான மற்றும் நம்பகமான செயல்பாட்டைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை...

ரத்மலானையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு

ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை...

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...