பளை இயக்கச்சியை ஆக்கிரமிக்கும் சிங்களவர்கள்

Date:

கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மை இனத்தைவர்கள் சிலர் காடுகளை வெட்டி காணி பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதாக பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக ஆனையிறவுக்கும் இயக்கச்சிக்கும் இடையில் ஏ9 வீதிக்கு கிழக்கு பக்கமாக உள்ள காட்டுப்பகுதியில் இயந்திர உபகரணங்கள் மூலம் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் காடுகளை வெட்டி பல ஏக்கர் பரளப்பளவில் காணிகளை பிடிக்கும் முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தவிரவும், இந்த பிரதேசத்திற்கு அருகில் இராணுவ முகாம் ஒன்று இருப்பதாகவும் அந்தப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், பளை காவல்துறை, கிராம அலுவலர் உள்ளிட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது, இந்நிலையில் பொது மக்கள் சிலர் காடுகளை வெட்டுபவர்களிடம் சென்று விசாரித்த போது அவர்கள் பதிலளிக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

எனவே இந்தப் பிரச்சினை தொடர்பாக உரிய தரப்பினர் குறித்த காடழிப்பு விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு...

ரணிலை உடனடியாக விடுவிக்குமாறு அழுத்தம்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு நோர்வேயின்...

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...