வாக்குச்சீட்டில் மொட்டுச் சின்னம் நிச்சயம் இருக்கும் – நாமல் திட்டவட்டம்

Date:

”இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் வாக்குச்சீட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னம் நிச்சயம் இருக்கும். அதில் சந்தேகத்துக்கு இடமில்லை. யார் அந்தச் சின்னத்துக்குரிய வேட்பாளர் என்பதுதான் தீர்மானிக்கப்பட வேண்டும்.”

– இவ்வாறு தமிழ் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார் மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ எம்.பி.

”அப்படியாயின், ரணில் விக்கிரமசிங்க மொட்டுச் சின்னத்தில் – பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் எனக் கூறுகின்றீர்களா?” எனக் கேட்டதற்கு,

”எமது கட்சி முன்நிறுத்தப் பரிசீலிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவர். அவரோ அல்லது வேறு எவரோ ஒருவர் நிச்சயம் மொட்டுக் கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை போட்டியிடுவார் என்பது உறுதி. எமது கட்சி நிச்சயம் களமிறங்கும். ஆனால் வேட்பாளர் யார் என்பதுதான் தீர்மானிக்கப்பட வேண்டும். கட்சி உரிய சமயத்தில் அதைத் தீர்மானித்து அறிவிக்கும்.” – என்றார் நாமல் ராஜபக்‌ஷ எம்.பி.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சங்கீத்சன் பிணையில் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொல்லிசை பாடகர்...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...