தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொள்ளாத பட்சத்தில் தான் அதில் பங்கேற்கத் தயார் என மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
“அந்த விவாதத்தில் அனுரகுமார திஸாநாயக்க என்னிடம் பாம்பை பற்றி, தேனைப் பற்றி, ஆன்டிஜென் பற்றி கேட்கலாம். நான் அவர்களுக்கு பதில் சொல்ல முடியும்” என்றும் கூறினார்.
லைட்ஹவுஸ் விரிவுரை மண்டபத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“இப்போது அனுரகுமார, ரோயல் கல்லூரியின் அப்பாவி முன்னாள் மாணவராக இருந்த சஜித் பிரேமதாசவை அழைத்துள்ளார். அவர் குற்றமற்றவர். அவரை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்? அவர் இருக்கட்டும். இப்போது அனுரகுமாரும் நானும் சமகாலத்தவர்கள். கொஞ்சம் தாமதமாக பட்டம் பெற்றார். ஆனால் எங்களுக்கு ஒரே வயது. சமூகத்தில் எதையாவது சாதித்தவராகவும் என்னைக் கருதலாம். அதனால்தான் சஜித் வரமாட்டார் என்றும் 6ஆம் திகதி தான் விவாதத்திற்கு வர விரும்புவதாகவும் திலித் தெரிவித்தார்.
நான் அநுரவிடம் கடினமான கேள்விகள் எதையும் கேட்க மாட்டேன், அவருடைய உடைகள், வணிக வகுப்பு பயணங்கள் அல்லது அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நான் அவரிடம் கேட்க மாட்டேன் என்று திலித் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.