தலைமன்னாருக்கு சட்டவிரோதமாக வருகை தந்த 5 பேர் கைது

Date:

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் படகில் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் இன்றைய தினம் திங்கட்கிழமை (3) காலை தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த 5 நபர்கள் கடற்படையினர் விசாரணைக்கு பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் தாழ்வுபாடு, தலைமன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37,39,24,26 மற்றும் 38 வயதுடைய ஆண்கள் என தெரிய வந்துள்ளது.

குறித்த 5 பேரும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சென்றுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையிலே குறித்த 5 பேரும் சட்ட விரோதமான முறையில் படகு மூலம் இந்தியாவில் இருந்து தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த நிலையில் இன்று திங்கட்கிழமை(3) காலை தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட குறித்த 5 சந்தேக நபர்கள் தற்போது தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதோடு,விசாரணைகளின் பின்னர் குறித்த நபர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...

மழையுடன் கூடிய வானிலை நீடிக்கும்

இன்று (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

வாகன இறக்குமதி குறையவில்லை

வாகனங்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டிருந்தாலும், அரசு எதிர்பார்த்த அளவில் வாகன இறக்குமதி...

பாடகர் கைது சம்பவம் குறித்து பொலிஸார் விளக்கம்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட LTTE அமைப்பை மகிமைப்படுத்தும் பாடல்கள் தொடர்பாக ஒருவர் கைது...