ரணிலுக்கு மேலும் 5 ஆண்டு ஆட்சி வழங்க வேண்டும் – அலி சபரி

Date:

நாட்டை மீட்டெடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவுக்கு, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மேலும் ஐந்தாண்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வந்துள்ளமைக்காக சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கைக்கு நற்பெயர் காணப்படுகின்றது. எவரும் எதிர்பாராத வேகத்தில் நாம் அதைச் செய்துள்ளோம். இது தொடர்பில் அறிய பலரும் ஆர்வமாக உள்ளனர். நாட்டை மீட்டெடுத்த தலைவர்தான் ரணில் விக்கிரமசிங்க. எனவே, நிலையானதொரு பொருளாதாரத்தை ஏற்படுத்த அவருக்கு மேலும் ஐந்தாண்டுகள் வழங்கப்படவேண்டும். அடுத்த ஜனாதிபதித் தேர்தலே இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்கும். எனவே, உணர்வு அரசியலுக்குப் பதிலாக வேலைத்திட்டங்கள் உடைய அரசியலுக்கே ஆதரவு வழங்கப்பட வேண்டும்”- என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...

விளையாட்டு அமைச்சின் பெயரில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெயரில் மோசடி

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் பெயரை தவறாக பயன்படுத்தி, வெளிநாட்டு வேலை...

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...