அம்பாறையில் இம்முறைத மிழரசுக்கு ஓர் ஆசனம் – 88 வாக்குகளால் சிலிண்டர் தோல்வி

Date:

அம்பாறையில் இம்முறைதமிழரசுக்கு ஓர் ஆசனம் – 88 வாக்குகளால் சிலிண்டர் தோல்விபத்தாவது நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி நான்கு ஆசனங்களுடன் மாவட்டத்தைக் கைப்பற்றியது.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தேசிய மக்கள் சக்தி அம்பாறை மாவட்டத்தை வெற்றி கொண்டது.

அந்தக் கட்சி  ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 313 வாக்குகளைப் பெற்று நான்கு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது .அடுத்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 46 ஆயிரத்து 899 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 33 ஆயிரத்து 911 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தையும், இலங்கைத்  தமிழரசுக் கட்சி 33 ஆயிரத்து 632 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தையும் பெற்றுள்ளன.அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக 7 ஆசனங்களுக்காக 640 பேர் போட்டியிட்டார்கள். 

இலங்கைத் தமிழரசுக் கட்சியை விட ஆக 129 வாக்குகளால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்ந்துள்ளது. அதேவேளை ஆக 88 வாக்குகளால் புதிய ஜனநாயக முன்னணி தோல்வியைத் தழுவியது.இலங்கைத் தமிழரசுக் கட்சி 33 ஆயிரத்து 632 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணி 33 ஆயிரத்து 544 வாக்குகளையும் பெற்றுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆசனம் எதையும் பெறவில்லை. ஆனால், இம்முறை தேர்தலில் முன்னாள் எம்.பி. கவீந்திரன் கோடீஸ்வரன் வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் செல்கின்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அனுரவிடம் சஜித் விடுத்துள்ள அவசர கோரிக்கை

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட எதிர்கட்சி தலைவர்...

இன்றும் மழை நீடிக்கும்

இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

IMF கடன் கிடைத்த கையோடு விலை கிடுகிடுவென உயரும்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (IMF) கடன் தவணைகளான இரண்டையும்...

SJBயிடம் தோல்வியுற்ற NPP

ஹிரியால பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் சபையைத் தேர்ந்தெடுக்க இன்று...