உக்ரைனில் உள்ள 27 இலங்கையர்களின் கதி

Date:

27 இலங்கையர்கள் உக்ரைனில் இருந்து வௌியேற மறுத்துள்ளதாக வௌிவிவகார அமைச்சர் பேராசியரியர் G.L.பீரிஸ் தெரிவித்தார்.

உக்ரைனில் 81 இலங்கையர்கள் இருந்ததாகவும் அவர்களில் 15 பேர் மாணவர்கள் எனவும் ஏனைய 66 பேரில் 39 பேர் தற்போது அங்கிருந்து வௌியேறியுள்ளதாகவும் G.L.பீரிஸ் கூறினார்.

அவ்வாறு வௌியேறியவர்கள் போலந்து, ருமேனியா, மோல்டோவா போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், எஞ்சியுள்ள 27 இலங்கையர்கள் உக்ரைனிலிருந்து வௌியேற விரும்பவில்லை என G.L.பீரிஸ் குறிப்பிட்டார்.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான மோதல் 14 ஆவது நாளாகவும் தொடர்கிறது. ரஷ்யா உக்ரைனின் 5 நகரங்களுக்கு போர் நிறுத்தம் அறிவித்துள்ள பின்புலத்தில், உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் வௌிவிவகார அமைச்சர்கள் இன்று (10) துருக்கியில் சந்திக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாடு வீழ்ச்சிப் பாதையில் – உண்மைகளை வெளியிடும் சஜித்!

நாடு கடுமையான பொருளாதார அபாய நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், அந்த அபாயம்...

ரணிலும் மஹிந்தவும் தொலைபேசி அழைப்பெடுத்து விமலிடம் கூறியது என்ன

மே 18ஆம் திகதி பாராளுமன்றம் அருகிலுள்ள ரணவீரு நினைவுச் சின்னம் பகுதியில்...

விமலுக்குப் பிணை

தலங்கம பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை பிணையில்...

விமல் கைது

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வின் ஒத்திகையை சீர்குலைத்ததாக...