நாடு திரும்புகிறார் ரணில்!

0
266

சிங்கப்பூரில் இதய அறுவை சிகிச்சை செய்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை நாடு திரும்புகிறார்

ரணில் விக்ரமசிங்க இதய அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு சென்றிருந்த நிலையில், அவர் நாளை (06) இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அடுத்த சில வாரங்கள் பொதுமக்கள் மத்தியில் செல்லாமல் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்க மார்ச் 15ஆம் திகதி சிங்கப்பூருக்கு புறப்பட்டு, மார்ச் 18ஆம் திகதி அந்நாட்டின் முன்னணி தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here