இந்த நாட்டில் தேசிய மக்கள் சக்தி (NPP) எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனில், விவசாயிகளும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விவசாயம், காணி, நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“உண்மையான நிலைமை என்னவென்றால், நமது நாட்டில் விவசாயிகள் மாறாமல் இந்த மாற்றத்தை ஏற்படுத்துவது கடினம். விவசாயிகளை புகழ்ந்து, ‘நீங்கள்தான் ராஜாக்கள், நாட்டிற்கு உணவு வழங்குபவர்கள்’ என்று மட்டும் கூறிக்கொண்டே இந்த மாற்றத்தை கொண்டு வர முடியாது. நாம் தற்போது ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குத் மாற்றமடையும் காலகட்டத்தில் இருக்கிறோம். அப்படிப்பட்ட மாற்றக் காலத்தில் நல்ல விமர்சனங்களையும் கேட்க வேண்டி வரும்; கெட்ட விமர்சனங்களையும் கேட்க வேண்டி வரும். அவை இரண்டிற்கும் தயாராக இருந்து, நல்ல மாற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்,” என்றார்.
அமைச்சர் கே.டி. லால்காந்த, அனுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு தெரிவித்தார்.
