ஜனாதிபதி நிதியத்தின் ரூ.2.46 கோடிக்கு ஆப்பு வைத்த முன்னாள் பிரதமர்!

0
143

முன்னாள் பிரதமர் ஒருவருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் ஜனாதிபதி நிதியிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளும் அடிப்படையில் வழங்கப்பட்ட சுமார் ரூ.2.46 கோடி இதுவரை மீளப் பெறப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2012 மற்றும் 2014 காலப்பகுதியில் மருத்துவ சிகிச்சை வசதிகளுக்காக முன்னாள் பிரதமர் ஒருவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் ஜனாதிபதி நிதியிலிருந்து மொத்தம் ரூ.4 கோடியே 7 லட்சத்து 17 ஆயிரத்து 941 வழங்கப்பட்டுள்ளது.

இதில் மீளப் பெறப்பட வேண்டிய ரூ.2 கோடியே 46 லட்சத்து 57 ஆயிரத்து 15 தொகை, 2026 மே 20ஆம் திகதி வரையிலும் மீளப் பெறப்படவில்லை என கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன்படி, 2012 ஏப்ரல் 4ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்ட ரூ.10,908,798 மற்றும் முன்னாள் பிரதமருக்கு வழங்கப்பட்ட ரூ.13,748,217 ஆகிய தொகைகளும் இதுவரை மீளப் பெறப்படவில்லை.

இந்த தகவல்கள் ஜனாதிபதி நிதியத்தின் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here