தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் களனிகம மற்றும் தொடங்கொட பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் சுமார் எட்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில், ஆறு பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பத்து பேர் காயமடைந்து சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
