சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

0
26

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க சமகி ஜன பலவேகய (SJB) தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். 

அண்மையில் நடைபெற்ற SJB நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் தொடர்பில் 40க்கும் மேற்பட்ட விடயங்கள் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த பிரேரணை விரைவில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போதைய தகவலின்படி பிரேரணை நாடாளுமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படும் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here