ஒக்டோபர் 1 முதல் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை

0
34

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான வளிமண்டல நிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று (செப்டம்பர் 30) ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலை காணப்படக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here