முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, இன்று (02) காலை 9.30 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனப் பதிவாளர் நிதியிலிருந்து 90 கோடி ரூபாய் மற்றொரு அரச நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த காலங்களில் வெள்ளிக்கிழமைகளில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் போன்ற விசாரணை நிறுவனங்களுக்கு அழைக்கப்பட்ட முன்னாள் அரசியல்வாதிகள் பலர் கைது செய்யப்பட்டு, பின்னர் மாலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
