முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ, மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில் மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளார்.
அவர் நேற்று (05) இரவு சுமார் 11.26 மணியளவில், மலேசியாவிலிருந்து இலங்கைக்கு வந்த MH 179 விமானம் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ‘சிரிலிய சவிய’ நிதியத்துடன் தொடர்புடைய கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அண்மையில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
