1,750 புதிய கெப் வாகனங்கள் விரைவில் கொள்வனவு

0
31

எரிபொருள் நெருக்கடியால் டொலருக்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தைக் கருத்திற்கொண்டு, 1,750 நவீன கெப் வாகனங்களைக் கொள்வனவு செய்வதைச் சிறிது காலத்திற்குத் தாமதப்படுத்தியுள்ளதாகவும், மிக விரைவில் அந்த வாகனங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரச திணைக்களங்களின் அத்தியாவசிய சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்குத் தேவையான குறைந்தபட்ச வாகனங்களின் எண்ணிக்கையைக் கோரியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அரச திணைக்களங்களில் பயன்படுத்தப்படும் பல வாகனங்கள் பழுதடைந்துள்ளதுடன், கணினிகள் உள்ளிட்ட உபகரணங்களும் மோசமான நிலையில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய சூழ்நிலையில் அரச சேவையைத் திறம்பட முன்னெடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போதைய எரிபொருள் நெருக்கடியால் டொலருக்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தை மேலும் அதிகரிக்கக் கூடாது என்பதற்காகவே வாகனக் கொள்வனவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், விரைவில் 1,750 வாகனங்களையும் கொள்வனவு செய்து, திணைக்களங்களின் தேவைகளுக்கு ஏற்ப அவற்றை வழங்க முடியும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தக் கருத்துகளை நேற்று (23) பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற அரசாங்க நில அளவையாளர்கள் சங்கத்தின் 100ஆவது வருடாந்த மாநாட்டில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here