கைதி பிக்கு ஆடைகள் தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியீடு

0
28

சிறையில் அடைக்கப்படும் பௌத்த பிக்குகளின் காவி ஆடைகளைக் களைவது தொடர்பில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைத் திருத்தி, பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, சிறைச்சாலைத் திணைக்களத்தின் நிலையான உத்தரவுகளில் 356A என்ற புதிய உத்தரவு சேர்க்கப்பட்டுள்ளது.

அதன்படி பௌத்த பிக்கு ஒருவர் சிறையில் அடைக்கப்படும்போது, அவர் அணிந்திருக்கும் காவி ஆடைகளைக் களைவது தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர், பௌத்த விவகாரத் திணைக்களத்துடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

பௌத்த விவகாரத் திணைக்களம், சம்பந்தப்பட்ட பௌத்த நிகாயம் அல்லது பீடத்துக்கு இது தொடர்பில் அறிவிக்க வேண்டும்.

காவி ஆடைகள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, சம்பந்தப்பட்ட நிகாயம் அல்லது பீடம் 10 நாட்களுக்குள் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அறிவிக்க வேண்டும்.

அந்தக் காலப்பகுதிக்குள் பதில் கிடைக்காவிட்டால், உரிய சட்ட விதிகளுக்கு அமைவாகத் தேவையான நடவடிக்கைகளை சிறைச்சாலைகள் ஆணையாளர் மேற்கொள்ள முடியும்.

சிறைச்சாலையின் நிலையான உத்தரவு 550 இலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி,சிறையில் உள்ள பௌத்த பிக்கு ஒருவர் கைதியாக சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும்போது, அவர் சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில் அணிந்திருந்த காவி ஆடைகளை அணிய அனுமதிக்கப்பட வேண்டும்.

எனினும், சம்பந்தப்பட்ட பௌத்த நிகாயம் அல்லது பீடம் அந்தப் பிக்கு காவி ஆடைகளை அணிவதற்கு அனுமதி வழங்காத நிலையில், உரிய விதிகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பிக்கு ஒருவர் சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து 7 வேலை நாட்களுக்குள், சம்பந்தப்பட்ட நிகாயம் அல்லது பீடத்திடம் தேவையான அனுமதியைப் பெறுவதற்காக பௌத்த விவகாரத் திணைக்களத்திடம் சிறைச்சாலைகள் ஆணையாளர் கோரிக்கை விடுக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here