எரிசக்தி அமைச்சினால் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் கப்பலுக்கு அரசாங்கம் பணம் செலுத்தத் தவறியதன் காரணமாக ஒரு வாரத்திற்கும் மேலாக கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் கடலில் ஒரு கச்சா எண்ணெய் தாங்கி நங்கூரமிடப்பட்டுள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த தொகையை செலுத்தி கப்பலை இறக்கினால் எரிபொருள் மற்றும் மின்சார பிரச்சினை ஓரளவுக்கு தணியும் எனவும் அதனை விடுவிப்பதற்கான டொலர்களை திரட்டும் நடவடிக்கையில் தற்போது அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.