சாமர சம்பத்தின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

0
14

லஞ்சக் குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை வழங்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) மறுப்புத் தெரிவித்துள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பொஸ்பேட் ஏற்றுமதிக்காக மூன்று தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதற்கு 84 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

இதேவேளை, கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான ஜானகி சிறிவர்தனவை எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை டிசம்பர் 1ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் அன்றைய தினம் சிறைச்சாலையில் இருந்தால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here