இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய இந்தியா நடவடிக்கை

Date:

தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள வல்வெட்டித்துறையை சேர்ந்த இரண்டு மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு இந்திய அரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் இருந்து கடந்த ஆண்டு ஒக்டோபர் 22 ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற நிலையில், இயந்திரக் கோளாறு காரணமாக படகு எல்லை தாண்டி இந்திய கடற்பரப்பிற்குள் சென்றமையினால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பில் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்து சென்னையில் உள்ள எக்மோர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், எல்லைதாண்டிய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட வல்வெட்டித் துறையை சேர்ந்த இரு மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு இந்திய அரசு நீதிமன்றுக்கு பரிந்துரை செய்துள்ளது.

அதன் பிரகாரம் அடுத்த வாரம் இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சாலேவுக்கு திடீர் மாரடைப்பு

முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சாலே திடீர் மாரடைப்பு...

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையில் 20 கிலோ அரிசி!!

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையின் கீழ் 20 கிலோ அரிசி...

ஜனாதிபதி செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளர் கைது…!

-போலி கடவுச்சீட்டு தயாரித்த குற்றச்சாட்டு: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் தொடர்புடைய நபர் ஒருவர்...

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...