முக்கிய தாதியர் சங்கம் எடுத்துள்ள திடீர் முடிவு

Date:

18 சுகாதார சேவை தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட பணிப் பகிஷ்கரிப்பிலிருந்து, அரச தாதியர் சங்கம் விலகியுள்ளது.

தமது சங்கம் தற்காலிகமாக இந்த போராட்டத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

சுகாதார ஊழியர்களினால் முன்னெடுக்கப்படும் பணிப் பகிஷ்கரிப்பை கைவிடுமாறு கோரி, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் கடந்த 10ம் திகதி இரண்டு இடைகால தடை உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

நீதிமன்ற உத்தரவிற்கு தலைசாய்த்து இந்த முடிவை எடுத்ததாக சமன் ரத்னப்பிரிய கூறியுள்ளார்.

மேலும், நோயாளர் பராமரிப்பு சேவையை அத்தியாவசியமாக்கும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...

சபாநாயகர் மீதான முறைப்பாட்டை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள லஞ்சம்...

ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு...

விபத்தில் மூவர் பலி

தல்துவ - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்...