யாழில் விசர் நாய் கடித்து இளைஞர் ஒருவர் மரணம்

Date:

யாழ்ப்பாணம், ஆவரங்கால் பகுதியில் விசர் நாய் கடித்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று (26) உயிரிழந்தார்.

ஆவரங்கால் கிழக்கு, புத்தூரைச் சேர்ந்த பிரதாபன் ஷாலமன் என்ற 23 வயதான இளைஞரே உயிரிழந்தார்.

சில தினங்களுக்கு முன்னர் நாய் கடித்து இயலாமைக்குள்ளான மேற்படி இளைஞர் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.

உடற்கூற்றுப் பரிசோதனையில் விசர் நாய் கடித்தே இளைஞர் உயிரிழந்தார் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது

அந்த இளைஞரைக் கடித்த விசர் நாய் வேறு யாரையும் கடித்திருக்கலாம் எனக் கருதப்படுவதால் அப்பகுதியில் அண்மையில் நாய்க்கடிக்கு உள்ளானோரும், உயிரிழந்த இளைஞருடன் பழகியவர்களும் வைத்தியசாலையை நாடுவது சிறந்தது என்று அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...

வெனிசுவேலா நிலநடுக்கம் – பலர் பலி

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள்...

அஸ்வெசும நலத்திட்டத்தில் மாற்றம்

இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும்...

மே மாதத்தில் தேசிய பணவீக்கம் 5.4% ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில்...