13 வயது சிறுமியின் திடீர் கர்ப்பத்தால் குழம்பிப் போயுள்ள வைத்தியர்கள்!

0
155

ஹெட்டிபொல பிரதேசத்தில்13 வயது சிறுமி மர்மமான முறையில் கர்ப்பமான சம்பவம் வைத்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் வைத்தியர்கள் மற்றும் பொலிஸார் நேற்று விசேட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பல நாட்களாக வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட சிறுமி குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருநாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் அவர் இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

குறித்து சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்ட போதிலும், அது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

சிறுமி நிரபராதி என அவரது பெற்றோர் பொலிஸாரிடம் பலமுறை கூறியுள்ளனர்.

சிறுமி குளியாப்பிட்டிய சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், சிறுமிக்கு உடல் ரீதியான எந்தவொரு தொடுகையிலும் ஈடுபட்டமைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here