கெஸ்பேவயில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் தடை

Date:

கெஸ்பேவயில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பொல்கசோவிட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருள் பௌசர் ஒன்று கெஸ்பேவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எரிபொருள் இறக்கும் சம்பவம் அண்மையில் பதிவாகியுள்ளது. விசாரணையை அடுத்து, கெஸ்பேவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கெஸ்பேவ எரிபொருள் நிரப்பு நிலையத்தின் நிர்வாகம் மறு அறிவித்தல் வரையில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இருந்து எரிபொருளை வெளியிட மாட்டோம் என நிரூபித்துள்ளது.

நாசவேலைகள் இடம்பெற்றால் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தோண்டத் தோண்ட வரும் மனித எலும்புக் கூடுகள்!

யாழ்ப்பாணம், செம்மணியின் நேற்றைய அகழ்வின் போது 5 என்புத் தொகுதிகள் புதிதாக...

தேசிய தலைவருக்கு விளக்கு கொழுத்தவுள்ள யாவருக்கும் வணக்கம்

“விடிய விடிய இராமர் கதை, விடிந்த பின் இராமர் சீதைக்கு என்ன...

ரணிலுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நீதிமன்ற தீர்ப்பு

2022  ஜூலை 17,   அன்று அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால்...

இன்றைய வானிலை

இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை...