காலநிலை நிலவரம்

Date:

பலத்த ம​ழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இன்று (11) காலை 5:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை (12) காலை 5:30 மணி வரை செல்லுபடியாகும் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த பெய்யக்கூடும் அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களைக் அறிவுறுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீகொடவில் கார் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் தன்சல் ஒன்றுக்கு வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள்...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. டீசல்: ரூ.15 அதிகரித்து ரூ.407 சூப்பர்...

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...