ஒரே முச்சக்கர வண்டியில் சென்ற 9 மாணவர்கள் வைத்தியசாலையில்

Date:

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் இன்று (14) பிற்பகல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது மாணவர்களும் வண்டியின் சாரதியும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி வளைவு ஒன்றில் கவிழ்ந்து சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக யாழ்.பொலிசார் தெரிவிக்கின்றனர்.

காலை இரண்டு முச்சக்கரவண்டிகளில் மாணவர்களை ஏற்றிச் சென்றதாகவும் இயந்திரக் கோளாறு காரணமாக முச்சக்கரவண்டியில் இருந்த மாணவர்கள் ஒரு முச்சக்கர வண்டியில் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் யாழ். பொஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் யாழ்.கொழும்புத்துறை இந்துக் கல்லூரி மற்றும் கொழும்புத்துறை துரைராசா மகா வித்தியாலயத்தின் ஆரம்ப தர மாணவர்கள் ஆவர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த தேர்தலுக்கு முன் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சிறையில்

அடுத்த தேர்தல் நடைபெறும் நேரத்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைத்து அரசியல்வாதிகளும் சிறையில்...

சீனி ஊழல் முடிவுக்கு வந்தது

2020 ஒக்டோபரில் சீனி மீதான ஐம்பது ரூபாய் வரியை 25 சதங்களாக...

யாழ் மாநகரின் முதல்வராக மதிவதனி தெரிவு

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று...

நாமல் – சஜித் அணி இணைந்து பிடித்த ஆட்சி

உடபத்தாவ பிரதேச சபையில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று (ஜூன்...