சர்வகட்சி அரசாங்கம் குறித்து சரத் பொன்சேகா கருத்து

0
270

சர்வகட்சி அரசாங்கம் பற்றி பேசுவது நகைச்சுவையாகிவிட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி அரசாங்கம் பற்றி பேசும் போது, ​​19வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு வலிமையான பிரதமர் ஒருவர் நியமிக்கப்படுவார் என தான் நினைத்ததாக பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த சூழலில் தேர்தலை நடத்த முடியாது என்பதால், புதிய சக்தியை கட்டியெழுப்ப வேண்டும் என்றும், அது அரசியலமைப்பு அதிகாரத்தை எடுத்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here