22 இந்திய மீனவர்கள் கைது!

Date:

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் புத்தளம் – கற்பிட்டி வடக்கு கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் திங்கட்கிழமை (05) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு படகுகளில் தமிழகம் – தூத்துக்குடியில் இருந்து வந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இரண்டு படகுகளில் வருகை தந்த குறித்த இந்திய மீனவர்கள் கற்பிட்டியில் வடக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்படையினரால் இந்த 22 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் குறித்த இந்திய மீனவர்கள் பயணித்த இரண்டு விசைப் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஞானசார தேரரின் வழக்கு 23ஆம் திகதியன்று மீண்டும் விசாரணைக்கு

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரின்...

நாமல், ஜானகி இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்...

ஷிரந்தி ராஜபக்ஷ நாடு திரும்பினார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ, மருத்துவ சிகிச்சைக்காக...

மொட்டு கட்சி உறுப்பினர் போதைப்பொருளுடன் கைது

பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம...