கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு 2026 ஜூன் மாதத்தில் குறைந்தபட்சம் ரூ.18,973 தேவைப்பட்டதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள வறுமைக் கோட்டுப் பட்டியலின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
2026 மே மாதத்தில் கொழும்பு மாவட்டத்திற்கான வறுமைக் கோடு ரூ.18,675 ஆக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் அது ரூ.18,973 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் வறுமைக் கோடு முதன்முறையாக ரூ.19,000 மட்டத்தை நெருங்கியுள்ளது.
அதேவேளை, 2026 ஜூன் மாதத்திற்கான தேசிய வறுமைக் கோடு ரூ.17,592 எனவும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
