சட்டவிரோதமாக உண்டியல் முறையில் பணப் பரிமாற்றம் மேற்கொண்டு வரும் நபர் ஒருவர் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவு நேற்று (18) மாலை வெல்லவீதிய பொலிஸ் பிரிவில் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது.
இதன்போது, ரூ. 10,467,000 பணம் எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடியாத காரணத்தினால், பணச் சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அவரிடமிருந்து போலியான ரூ.1,000 நாணயத்தாளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 19 வயதுடைய கொழும்பு 05 பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவு முன்னெடுத்து வருகிறது.
