நேபாளத்தின் போட்டே கோஷி (Bhote Koshi) ஆற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய திடீர் வெள்ளம் காரணமாக ராசுவா, நுவாகோட் மற்றும் தாதிங் மாவட்டங்களில் பெரும் உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது.
சீனப் பகுதியில் இருந்து நேபாளத்திற்குள் வந்த வெள்ளம், போட்டே கோஷி மற்றும் திரிசூலி ஆறுகளின் கரையோரத்தில் இருந்த குடியிருப்புகளை அடித்துச் சென்றுள்ளது.
வீடுகள் மற்றும் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதுடன்,
பாலங்கள், சாலைகள் மற்றும் முக்கியமான நீர்மின் நிலையத் திட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட ராசுவா, நுவாகோட் மற்றும் தாதிங் ஆகிய மூன்று மாவட்டங்களையும் பேரிடர் நெருக்கடி பகுதிகளாக நேபாள அரசு அறிவித்துள்ளது.
காணாமல் போனவர்களைத் தேடும் பணியும், மீட்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பல இடங்களில் நெடுஞ்சாலைகளின் பகுதிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், மீட்புப் பணிகளிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. Onlinekhabar வெளியிட்டுள்ள அடுத்தடுத்த தகவல்களில், 95 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 63 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
