அனுராதபுரம் மொட்டு மேடையில் நாமலுக்கு பதிலாக லிமினி!

0
172

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியினால் எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்தப்படவுள்ள மாபெரும் மக்கள் பேரணியின் பிரதான மேடையில், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி வீரசிங்க ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாமல் ராஜபக்ஷ நேற்று (04) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், SLPP இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனுராதபுர பேரணியில் கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொள்ளவுள்ளார். எனினும், அவர் பிரதான மேடையில் ஏறி உரையாற்றாமல், மேடைக்கு முன்பாக மக்கள் மத்தியில் அல்லது மற்றொரு மேடையில் இருந்து பேரணியில் கலந்துகொள்ள தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, லிமினி வீரசிங்க ராஜபக்ஷ முதன்முறையாக SLPP-யின் பிரதான மேடையில் ஏறி மக்கள் மத்தியில் உரையாற்றவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த காலத்தில் லிமினியின் ஜாதகத்தை ஆய்வு செய்த பிரபல ஜோதிடர் ஒருவர், அவரது ஜாதக கிரக நிலை, உலகின் முதல் பெண் பிரதமரான சிறிமாவோ ரத்வத்தே டயஸ் பண்டாரநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரின் ஜாதகங்களைப் போன்றே மிகவும் வலிமையானது எனக் கூறியதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here