மரக்கறி விலைகள் உச்சத்தில்

0
333

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக சந்தையில் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி போஞ்சி, கேரட், எலுமிச்சை, பச்சை மிளகாய் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

பொதுச் சந்தையில் போஞ்சி கிலோ 800 முதல் 850 ரூபாய் வரையிலும், கேரட் கிலோ 550 முதல் 600 ரூபாய் வரையிலும், முட்டைகோஸ் கிலோ 540 ரூபாய் வரையிலும், தக்காளி கிலோ 590 ரூபாய் வரையிலும், புடளங்கா 590 ரூபா வரையிலும், மிளகாய் 950 ரூபா, கத்திரிக்காய் கிலோ 520 ரூபா, வெண்டைக்காய் கிலோ 350 ரூபா, கறிவேப்பிலை கிலோ 990, இஞ்சி கிலோ 1750, 2200 ரூபா என நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, அனைத்து வகையான பலாப்பழம், பேரீச்சம்பழம், மரக்கறிகள் போன்றவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here