வட மாகாண ஆளுநரின் வர்த்தமானி குறித்து ஜனாதிபதி எடுத்துள்ள அதிரடி முடிவு

Date:

வடக்கு மாகாண ஆளுநரால் சட்ட முரணாக வெளியிட்ட  வர்த்தமானியை இரத்தச் செய்யுமாறு  நீதியமைச்சருக்கு ஜனாதிபதி  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா 2022-10-27 அன்று இரு நியதிச் சட்டங்களை உருவாக்கி அவற்றை 2303/29 இலக்க வர்த்தமானியில் பிரசுரித்திருந்தார். இதனை தவறு எனச் சுட்டிக் காட்டி வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா அறிக்கை விட்ட அதேநேரம் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் (2022-12-05) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட சமயம் வடக்கு ஆளுநரால் 2022-10-27 அன்று வெளியிட்ட இரு வர்த்தமானியினையும் உடனடியாக இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராயபக்சாவிடம்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பணிப்புரை விடுத்தார். இதற்கமைய இரு வர்த்தமானிகளும் இந்த வாரம் இரத்துச் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்...

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...