விபத்தில் தந்தையும் மகனும் ஸ்தலத்தில் பலி, தாய் காயத்துடன் வைத்தியசாலையில்

Date:

ஹைலெவல் வீதியில் கொஸ்கம மிரிஸ்வத்த பகுதியில் சீமெந்து ஏற்றப்பட்ட லொறி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தாரின் தாய் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீமெந்து ஏற்றிய லொறி ஒன்று கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி சென்று கொண்டிருந்த போது திடீரென எதிர்திசையில் பாய்ந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொஸ்கம அலுபோதல பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய தந்தையும் 8 வயது சிறுவனும் உயிரிழந்துள்ளனர்.

கொஸ்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

புதிய அமைச்சர்கள, பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு

இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

அமைச்சரவையில் திடீர் மாற்றம்

இன்று (10) அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.  2026...

இன்றைய வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

கலகெதரவிலும் ஆளும் கட்சிக்கு படுதோல்வி

கண்டி மாவட்டத்தில் உள்ள கலகெதர பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற...