ஒரே வீட்டில் தூக்கில் தொங்கியவாறுஆணும் பெண்ணும் சடலங்களாக மீட்பு

Date:

உடப்புஸ்ஸலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல – பாஹலகம பகுதியில் வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரினதும், பெண் ஒருவரினதும் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன என்று உடப்புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

39 மற்றும் 42 வயதுடைய இருவர் ஒரே வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மூன்று பிள்ளைகளின் தாயான டபிள்யூ.எம்.பிரியங்கனி (வயது 42) மற்றும் திருமணமாகாத ஆண் பி.எம்.அனுர பண்டார (வயது 39) ஆகிய இருவரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும் உடப்புஸ்ஸலாவ பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ள மூன்று பிள்ளைகளின் தாயான பிரியங்கனிக்கும், இவருடன் உயிரிழந்த திருமணமாகாத ஆண் அனுர பண்டார ஆகிய இருவருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேநேரத்தில் இருவருக்கும் இடையில் இருந்து வந்த தகாத உறவு பெண்ணின் கணவருக்குத் தெரியவந்ததையடுத்து நேற்றுமுன்தினம் மாலை தாக்குதல் சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து மேற்படி பெண் தனது வீட்டை விட்டு தகாத உறவைப் பேணி வந்த நபருடன் சென்றுள்ள நிலையில் இருவரும் வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வலப்பனை நீதிவான் வருகை தந்து சடலங்களைப் பார்வையிட்டு மரண விசாரணை நடத்தினார்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா போன்ற கோணங்களில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...