மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்

Date:

ஞாயிறு தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தாம் கருதுவதாக கொழும்பு மறைமாவட்ட மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் பேராயர் ஜூட் கிரிஷாந்த தெரிவித்துள்ளார்.

அருட்தந்தை ஜூட் கிருஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று சென்று வாக்குமூலம் அளித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்.

கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்கும் பொருட்டே அருட்தந்தை ஜூட் கிருஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக்கூற வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வௌியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 3 மணித்தியாலங்கள் அருட்தந்தை ஜூட் கிருஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க வௌியிட்ட தகவல்கள் உண்மையானதாக இருந்தால், அதை சட்டமா அதிபருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் தெரிவித்ததாக அருட்தந்தை ஜூட் கிருஷாந்த தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

விமலுக்குப் பிணை

தலங்கம பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை பிணையில்...

விமல் கைது

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வின் ஒத்திகையை சீர்குலைத்ததாக...

யசந்த கோதாகொட நியமனத்துக்கு அரசியல் அமைப்பு சபை அனுமதி

இலங்கையின் உயர்நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொட நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக...

திருமாவை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய பாராளுமன்ற உறுப்பினரும்...