ஜனவரி 8 முதல் மழை அதிகரிக்கும்

Date:

இலங்கையின் தென்கிழக்கு திசையில் உள்ள வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவி வந்த கீழ்மட்ட வளிமண்டலக் குழப்ப நிலை தற்போது குறைந்த அழுத்தப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வானிலை அமைப்பின் தாக்கம் காரணமாக, ஜனவரி 08 முதல் நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, இன்று (ஜனவரி 06) கிழக்கு, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் இடையிடையே மழை பெய்யும். மேலும், ஊவா மாகாணம் மற்றும் நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீட்டர் அளவிற்கு கனமழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு, மொணராகலை மாவட்டங்களில் இடையிடையே மணிக்கு சுமார் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய திடீர் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை ஆய்வு திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதம்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேலும் பல ரகசியங்கள் கசிவு

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு...

NDB ஊழல், கைதானவர் விளக்கமறியலில்

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) தரவு அமைப்பிற்குச் சட்டவிரோதமாக ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாடு முழுவதிலும் இன்று (9) காலை 8 மணி முதல் 48...